காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவாகும் காட்சிகளை பாதுகாத்து வைக்க கோரி வழக்கு - தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு
காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பாதுகாத்து வைப்பதற்கான திட்டத்தை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை கைதிகள் கடுமையாக தாக்கப்படுவது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் காவல் நிலையங்களில் அண்மை காலமாக அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை தடுக்க காவல் நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட கோரி நிஜாமுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பல காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பாரமரிப்பு இல்லாமல் இயங்காத நிலையில் இருப்பதாகவும், காவல்நிலையத்திற்குள் நடக்கும் குற்றங்களை மறைக்க சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டு ஆதாரமான காட்சி பதிவுகளை நீக்கி விடுவதாகவும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை
நவம்பர்6 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.