வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் தூண்டில் வளைவு துறைமுகம் இல்லாததால் படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.