"கடன் வசூல் ஏஜென்சிகளின் கெடுபிடிகளை தடுக்க முடியாதா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
வங்கிக்கடன் வசூலிக்கும் போது ஏஜென்சிகளின் சட்டவிரோத நடைமுறைகளை தடுக்க முடியாதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், மாங்காட்டை சேர்ந்த பூபதி ராஜா என்பவர் செய்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக வங்கிக்கடன் கட்டமுடியாத நிலையில் உள்ள தன்னை, வங்கி கடன் வசூல் பிரிவினர் தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன், குடும்பத்தினரையும் மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்,. இந்த மனுவை நீதிபதிகள் கடன் வசூல் செய்யும் தனியார் ஏஜென்சிகள் சட்டவிரோதமாக நடப்பதை தடுக்க முடியாதா? என கேள்வி எழுப்பினர்,. மேலும், ஏழைகளிடம் தான் அதிகளவு கெடுபிடி காட்டும் வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடியில் கடன் வாங்கி செலுத்தாவர்களிடம் கெடுபிடியை காட்டுவதில்லை எனவும் தெரிவித்தனர்,. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற விவகாரங்களில் ரிசர்வ் வங்கி தரப்பில் எத்தனை குற்றவியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய நிதித்துறை செயலர், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..