தொடர்ந்து 8வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் - வரி நீக்கப்பட்ட டீசலை வழங்க கோரிக்கை

தொடர்ந்து எட்டாவது நாளாக வரி நீக்கப்பட்ட டீசலை வழங்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-09-14 09:37 GMT
தொடர்ந்து எட்டாவது நாளாக வரி நீக்கப்பட்ட டீசலை வழங்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலையின் காரணமாக மீன்பிடி படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சார்பு தொழிலாளர்களும் வேலையை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் துறைமுகத்தில் கடந்த 8 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 16 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்