தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - 3வது நாளாக தேடும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை யாசீர், தனது சகோதரிகள் உட்பட மூன்று பேருடன் கும்மனூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் குளிக்க சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை யாசீர், தனது சகோதரிகள் உட்பட மூன்று பேருடன் கும்மனூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் குளிக்க சென்றுள்ளார். இவர்களில் யாசீர் மற்றும் இர்பான் ஆகிய இருவர் மட்டும் ஆற்றில் இறங்கி குளித்து உள்ளனர். அப்போது ஆற்றில் வரும் நீர் அதிகரிக்கவே இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இருவரையும் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். நேற்று யாசீரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இர்பானை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.