நீர்நிலைகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள் - பறவைகளை ரசித்தவாறு செல்லும் வாகன ஓட்டிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகள், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஓரளவு நிரம்பியுள்ளன.

Update: 2020-09-07 10:03 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகள், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஓரளவு நிரம்பியுள்ளன. இந்நிலையில், கும்டாபுரம் கிராமத்தில் தாளவாடி - சத்தியமங்கலம் சாலையோரம் அமைந்துள்ள குட்டையில் கடந்த சில நாட்களாக சில வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. நீளமான  அலகுகளை கொண்ட இந்த பறவைகள் குட்டையில் உள்ள பாறைகள் மீது இறகுகளை விரித்து அமர்ந்துள்ளதோடு, மீன்களுக்காக காத்திருக்கின்றனர். வித்தியாசமாக இருக்கும் இந்த பறவையை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ரசித்தவாறு செல்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்