வேலூரில் 2 மாதங்களுக்கு பிறகு நேதாஜி மார்க்கெட் திறப்பு
வேலூரில் அதிக அளவு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதியான நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு உள்ளிட்ட பகுதிகள் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
வேலூரில் அதிக அளவு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதியான நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு உள்ளிட்ட பகுதிகள் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. மார்க்கெட் பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். காலை முதலே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.