அரியர்ஸ் பாட தேர்ச்சி அறிவிப்பு விவகாரம் - அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக ஆக.31ல் தமிழக அரசு அறிவிப்பு
பல்கலைக் கழக தேர்வுகளை நடத்த முடியாததால், அரியர் வைத்திருந்த மாணவர்கள் உட்பட, தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு கடந்த 31ஆம் தேதி அறிவித்தது.
பல்கலைக் கழக தேர்வுகளை நடத்த முடியாததால், அரியர் வைத்திருந்த மாணவர்கள் உட்பட, தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு கடந்த 31ஆம் தேதி அறிவித்தது. தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலே, அந்தப் பாடத்தில் ஏற்கனவே பெற்ற அகமதிப்பீடு மற்றும் பாடத்தின் சராசரி விகிதத்தில் மதிப்பெண் வழங்கப்படும் என கூறப்பட்டது.இந்நிலையில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிரான இந்தக் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், அதுபோல் எந்தக் கடிதத்தையும், ஏஐசிடிஇ அனுப்பவில்லை என்றார். அவ்வாறு இருப்பின், அதை தமிழக அரசுக்கு அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் அனுப்பவில்லை என கூறிய அன்பழகன், பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைப்படியே அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதாகவும் கூறியுள்ளார். அரியர்ஸ் பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை, 13 பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஏற்றுள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மட்டும் ஏற்க மறுப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.