எச்சரிக்கை - கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம்
கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதார விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தனிமைப்படுத்துதல் விதிகளை மீறி, வெளியே சுற்றுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசத்தை முறையாக அணியவில்லை எனில், 200 ரூபாயும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனி நபர்களுக்கும் 500 ரூபாய் அபராதம் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
VOGFX - 6
கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத தனி நபர்களுக்கு, 500 ரூபாயும், வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
----
எச்சரிக்கை - விதிமீறினால் கடும் அபராதம்