4000 ஹெக்டேரில் கருகும் வேர்க்கடலை - மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கெலமங்கலம், தளி பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கெலமங்கலம், தளி பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளனர். அங்கு பருவ மழை பெய்யாததால் வெயிலில் வேர்க்கடலை கொடி காய்ந்து கருகி வருகிறது. இதனால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும், அரசு உதவ வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.