மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் - தமிழக காவல்துறைக்கு ஊர்க்காவல் படையினர் கோரிக்கை
தமிழகத்தில் ஊர்க்காவல் படையினரை கொரோனா பணிக்கு இன்று முதல் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக காவல்துறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊர்க்காவல் படையினரை கொரோனா பணிக்கு இன்று முதல் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக காவல்துறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பழைய முறை போல மாதம் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் தொடரும் நிலையில், தமிழக காவல் துறையின் இந்த உத்தரவால் சுமார் 15 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. எனவே தங்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்க்காவல் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.