முடிவுற்ற திட்டப் பணிகள்,130 புதிய திட்டப் பணிகள் - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Update: 2020-08-21 07:50 GMT
கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த 26 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், 137 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு 91 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்