ஆற்றில் அடித்து வரப்பட்ட 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் ஆற்றில் சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று இன்று மிதந்து வந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் ஆற்றில் சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று இன்று மிதந்து வந்தது. பாம்பை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஆற்றில் இறங்கி அதனை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், பாம்பு ஆற்றின் கரையில் சென்று பதுங்கி கொண்டது. இருப்பினும் இளைஞர்கள் போராடி பாம்பை மீட்டு கரையில் கொண்டு வந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பாம்பை வேளிமலையில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று வனத்துறையினர் திறந்து விட்டனர்.