"25 கிலோ பூண்டு சாம்பிள் வேணும்" - வடிவேலு சினிமா பாணியில் திருட்டு

முருகன் என்பவரின் கடைக்கு வந்த செல்லூரை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் 25 கிலோ பூண்டு வேண்டும் என கேட்டுள்ளார்.

Update: 2020-08-18 08:17 GMT
இதே போன்றதொரு சம்பவம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்திருக்கிறது. அங்கு முருகன் என்பவரின் கடைக்கு வந்த செல்லூரை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் 25 கிலோ பூண்டு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்காக தற்போது சாம்பிள் பூண்டு கொடுங்கள் என பூண்டின் தரம் பார்ப்பது போல, ஏதேதோ பேசியுள்ளார். சிறிது நேரத்தில், கணவரை அனுப்புகிறேன் கொடுத்து அனுப்புங்கள் என கூறிவிட்டு மீனாட்சி அங்கிருந்து நடையை கட்டியுள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர் கல்லாவை பார்த்தபோது அதில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மாயமாகியிருந்த‌து. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீனாட்சி மடக்கி பிடிக்கப்பட்டார். அவரிடம் சோதனை செய்த போலீசார், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். இதனிடையே மீனாட்சியை படம்எடுக்க எடுக்க முயற்சித்தபோது, அவர் ஆவேசமாக பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்