பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? - மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி
பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது தான். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் நடப்பாண்டில் ரத்து செய்து விட்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பிடிவாதம் தேவையற்றது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.