சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற ஜமாபந்தி

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது,

Update: 2020-07-08 03:10 GMT
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரின் மேஜையின் முன்பு திரண்டு சமூக இடைவெளியின்றி நின்று கொண்டு  விளக்கமளித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு - பொதுமக்களுக்கு அறிவுரை


விழுப்புரம் நகரில் ஆட்சியர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் பகுதியில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை நடந்தே சென்று கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டார். அந்த சமயத்தில் ஒரு சிலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததை பார்த்த ஆட்சியர், அவர்களை கடுமையாக எச்சரித்தார். இனிமேல் முக கவசம் அணியாமல் வந்தால் பொருட்களை வழங்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்


புதிதாக தொற்று ஏற்படவில்லை - சுகாதாரத் துறை தகவல்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக நேற்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,. . 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 196 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

ஒரே நாளில் 144 - பேருக்கு கொரோனா  தொற்று


தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 144-பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், மொத்த பாதிப்பு ஆயிரத்து 416 ஆக அதிகரித்து உள்ளது.  இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை  முடிந்து 1080-பேர் வீடு திரும்பி உள்ளனர்


நெல் மூட்டைகள் அரவை பணிக்கு அனுப்பிவைப்பு - சென்னை வாசிகளுக்கு தயாராகும் அரிசி



கோவையில் உள்ள அரசு அரவை ஆலைக்கு  மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயிலில் 25 ஆயிரம் மூட்டைகள் கொண்ட 1000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.  இதேபோல சீர்காழி ரயில் நிலையத்தில் 1000 டன் நெல் மூட்டைகள் சென்னை தனியார் அரவை ஆலைக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த  நெல் மூட்டைகள் அனைத்தும் பச்சை அரிசியாக அரைக்கப்பட்டு சென்னை மக்களுக்காக ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்