தந்தை, மகன் மரணம் தொடர்பான விசாரணை - ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தித்துறை நடுவர்களை மரியாதை குறைவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீதித்துறை நடுவர்களை மரியாதை குறைவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் மகாராஜனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.