பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம் - காசியின் நெருங்கிய நண்பர் கைது
கன்னியாகுமரியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில், பல ஆபாச படங்கள் அந்த செல்போனில் இருந்தது தெரிய வந்தது. காசி உடன் கூட்டு சேர்ந்து இவரும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்த செல்போனை சைபர் கிரைம் போலீசாரிடம் ஆய்வுக்காக கொடுத்துள்ளனர். இதன் மூலம் காசியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.