"அரசின் சலுகை, திட்டம் தொடர்பான தரவுகளை, இணையத்தில் பதிவேற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசின் சலுகை, திட்டம் தொடர்பான தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து, மக்களுக்கு உதவி செய்யுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-06-22 17:10 GMT
அரசின் சலுகை, திட்டம் தொடர்பான தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து, மக்களுக்கு உதவி செய்யுங்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்