கன்னியாகுமரி காவல் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு - காவல்நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கண்காணிப்பில் உள்ள காவல்நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பணியின் போது ஆய்வாளருடன் தொடர்பில் இருந்த காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.