ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு தொற்று உறுதியான விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிந்தது.

Update: 2020-06-15 13:58 GMT
ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து,  உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிந்தது. விசாரணையில், ராயபுரம் குழந்தைகள்  காப்பகத்தில் தொற்று ஏற்பட்டது,  தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ராயபுரத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது கூறியுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால், எப்படி பரவியது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளது. தற்போது குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்கள் என்றும், காப்பகம் முழுவதுமாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்