கொரோனா நோயாளியை அனுமதிக்க மறுப்பு - பறிபோன உயிர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை அனுமதிக்க மறுத்து தனியார் மருத்துவமனைகள் அலைகழித்த காரணத்தால், அந்த நோயாளி பரிதபாமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-06-08 05:07 GMT
பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 54 வயது தொழிலதிபருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தீவர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாத காரணத்தால் அனுமதிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

பின்னர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் அவரை அனுமதிக்க வில்லை என தெரிகிறது. இறுதியாக ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நிலையில் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தந்தையின் மரணத்திற்கு தனியார் மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பே காரணம் என்றும் உரிய நேரத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என மறைந்த தொழிலதிபரின் மகன்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதேநிலை பிற கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஏற்படாமல் இருக்க, சென்னை மாநகராட்சி, மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தந்தையை பறி கொடுத்த மகன்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்