என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விவகாரம் - உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்வு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில், உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில், உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் 8 பேர் பலத்த காயமடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.