"உடனடியாக அனுமதி சீட்டு வழங்க பரிசீலிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியாக அனுமதி சீட்டு வழங்க பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-05-08 11:45 GMT
துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதிச் சீட்டு கோரி அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஒரு மணி நேரத்தில்  முடிவெடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மின்னணு அனுமதி சீட்டு வழங்கும் கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால், அவசரகால பயணங்களுக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.  மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்