நாகர்கோவில்: சோதனை முடிவு தெரியாமல் மக்கள் குழப்பம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 150 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் மூன்று நாட்களாகியும் வெளியாகவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 150 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் மூன்று நாட்களாகியும் வெளியாகவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், மூன்று நாட்களாகியும் பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடவில்லை. இதனால் சம்பந்தப்பட்டோர் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.