உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

Update: 2020-04-10 03:40 GMT
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர். போலீசார் அளித்த தகவலின் பேரில், அவர்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்