144 தடை உத்தரவை மீறி சென்ற 23 வாகனங்கள் பறிமுதல் - பதிவு எண், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை
வேலூரில் 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலூரில் 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி சென்றாக கடந்த 2 நாட்களில் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 23 வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் தெரிவித்துள்ளார். வாகனங்களின் பதிவு எண்களும், ஓட்டுனர்களின் உரிமங்களும் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.