"யெஸ்" வங்கி இன்று மாலை 6 மணி முதல் செயல்படும்" - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
"யெஸ்" வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததை அடுத்து மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பாட்டில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.
"யெஸ்" வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததை அடுத்து மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பாட்டில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. ஏப்ரல்-3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது. இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடு இன்று முதல் விலக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.