தடையை மீறி பாத யாத்திரை - இளைஞர் காங்கிரஸார் மீது போலீசார் தடியடி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையின் 90-வது நினைவு தினத்தை ஒட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Update: 2020-03-12 10:04 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையின் 90-வது நினைவு தினத்தை ஒட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குளச்சல் போலீசார் பாத யாத்திரைக்கு தடை விதித்தனர். அதோடு, குளச்சல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும் தடையை மீறி இளைஞர் காங்கிரசார் பாத யாத்திரையை தொடங்கினர்.  இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு 25-க்கு மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். இச்சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸார் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்