பள்ளி வாசலில் குப்பை தொட்டியை வைத்த விவகாரம் - நகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

பள்ளி வாசலில் குப்பை தொட்டியை வைத்ததற்கு, நகராட்சி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

Update: 2020-03-10 11:23 GMT
ராஜபாளையத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில், வரி செலுத்தவில்லை என்ற காரணத்தை கூறி மாணவர்கள் சென்று வரும் வழியில் குப்பை தொட்டியை வைத்துள்ளனர். இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி வசூல் செய்வதற்கு பல வழிமுறை உள்ள நிலையில், அதனை விட்டு விட்டு, பள்ளி  வாசலில் குப்பை தொட்டியை வைத்தது கண்டிக்கத்தக்கது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக குப்பை தொட்டியை அகற்றாவிட்டால் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை செய்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்