சட்டசபை நோக்கி மா.கம்யூ கட்சியினர் பேரணி - பேரணியை போலீசார் தடுத்ததால் சாலைமறியல்
சென்னையில் சட்டசபை நோக்கி பேரணியாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்காக சென்னை பாரிமுனையில் இருந்து, பேரணியாக சென்ற அவர்களை போலீசார், சிறிது தூரத்திலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் பாரிமுனை சந்திப்பில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.