சரபங்கா நீரேற்று திட்ட வழக்கு - வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
மேட்டூர் சரபங்கா திட்டத்துக்கான 565 கோடி ரூபாய் டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேட்டூர் அணையின் உபரி நீரை100 வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விடுவதற்காக சரபங்கா நீரேற்று திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* இதற்காக, 565 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்ட நிலையில், விதிமீறல் உள்ளதாக கூறி சேலத்தை சேர்ந்த அருள் நம்பி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
* வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாசனத் திட்ட வல்லுனர்கள் மூலம் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதிக தொகைக்கான டெண்டர்களை எதிர்த்து தொடரும் வழக்குகளை ஏற்றால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடும் எனவும் தெரிவித்தது.
* மேலும், விதிமீறல்கள் இல்லாத நிலையில், பொதுநல மனு நடைமுறையை தவறாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.