கோவில்பட்டி பிரபல தனியார் மருத்துவமனையில் ஐ.டி. சோதனை - 19 பேர் குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை
கோவில்பட்டியில் பிரபல தனியார் மருத்துவமனையில் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் ஸ்கேன் மையம், திருமண மண்டபம் இயங்கி வருகின்றன. கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 19 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து மருத்துவமனை, ஸ்கேன் மையம், உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆவணங்கள் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மதியம் தொடங்கிய சோதனை இரவு 11 மணியை கடந்தும் நீடித்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.