"விசில் அடித்து, சவுண்ட் விடுபவன் தான் அதிமுக காரன்" - ராஜேந்திர பாலாஜி கலகலப்பு பேச்சு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலகலப்பாக பேசி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலகலப்பாக பேசி உள்ளார். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விசில் அடித்து சவுண்ட் விடுபவன் தான் அதிமுக காரன் என்றும், கைகட்டி அமைதியாக இருக்க காங்கிரஸ்காரர்களா எனவும் பேசினார். ராஜேந்திர பாலாஜியின் இந்த கலகலப்பான பேச்சால், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.