"திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க அமமுக முயற்சிக்கும்" - அமமுக பொது செயலாளர் தினகரன் பேட்டி

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்து பேசினார்.

Update: 2020-02-27 19:26 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து  அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழக அரசின் வேளாண் மண்டல அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்க  அனைத்து முயற்சிகளையும் அமமுக மேற்கொள்ளும் என்றும் தினகரன் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்