ஆட்சியரை அதிர வைத்த மீனவ பெண் - சொத்து விவரங்களை கேட்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய கடல் மீன்வள வரைவு மசோதா கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் சொத்து விவரங்களை கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஒதேசிய கடல் மீன்வள வரைவு மசோதா கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில், மீனவ பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் சொத்து விவரங்களை கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆட்சியர், தனது சொத்து விபரத்தை ஒவ்வொரு ஆண்டும், அரசுக்கு சமர்ப்பித்து வருவதாக கூறினார். பின்னர், ஆவேசமடைந்த அப்பெண், தங்களது சொத்தான கடலை பறித்து கொள்ள அரசு முயற்சிப்பதாக குறிப்பிட்டு, தங்கள் சொத்தை யாருக்கும் விட்டுத் தரமாட்டோம் என்றார். தனது கருத்தை அழுத்தமாக வலியுறுத்தவே, உதாரணத்திற்காக, மாவட்ட ஆட்சியரின் சொத்து குறித்து கேள்வி எழுப்பியதாக அந்தப் பெண் தெரிவித்தார்.