"சிஏஏ அனைவருக்கும் ஆபத்தானது" - பழ. நெடுமாறன எதிர்ப்பு
குடியுரிமை சட்டத் திருத்தம் அனைத்து மக்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தம் அனைத்து மக்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். சிஏஏ-வுக்கு எதிராக தஞ்சை ஆட்டுமந்தை தெரு அத்தர் பள்ளிவாசல் முன், 9வது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழ. நெடுமாறன், சிஏஏ மற்றும் என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவை அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்றார். கிராமப்புறங்களில் மருத்துவச்சிகள் மூலம் குழந்தைபேறு நடைபெற்றது என்றும், அவ்வாறு பிறந்தவர்களால், சரியான சான்றிதழ் கொடுக்க முடியாது என்றும் பழ. நெடுமாறன் கூறினார்.