குமரி மாவட்ட ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை : "மார்ச்15-க்குள் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை"
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை விவரங்கள் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை விவரங்கள் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகர்கோவில் அருகே தோவாளையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறினார்.