"தங்கம் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தங்கம் விலை உயர்வை சமாளிக்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-23 06:39 GMT
தங்கம் விலை உயர்வை சமாளிக்க  இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கம் விற்பனையில் சேதாரம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையையும் அரசு தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இறக்குமதி வரியை குறைத்து தங்கம் கடத்தலை கட்டுப்படுத்தினால் தங்கம் விலை குறைய வாயப்புள்ளது எனவும் இதனால் ஏழை எளிய மக்கள் நிம்மதி அடைவார்கள் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்