"மக்களை திசைத்திருப்ப குடியுரிமை சட்டம் தேவைப்படுகிறது" - மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீது சீமான் குற்றச்சாட்டு

மக்களை திசை திருப்ப ஆட்சியாளர்களுக்கு குடியுரிமை சட்டம் தேவைப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

Update: 2020-02-22 20:33 GMT
மக்களை திசை திருப்ப ஆட்சியாளர்களுக்கு குடியுரிமை சட்டம் தேவைப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் விமர்சித்துள்ளார். கோவை ஆத்துப்பாலம் பகுதியில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  நாட்டை இப்படி பதற்றமாக வைத்திருப்தால் இந்தியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி விற்பனைக்கு வந்ததை யாரும் பேச வில்லை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்