தங்கம் விலை தொடர்ந்து விலையேற்றம் - ஒரு சவரன் ரூ.32,576 ஆக உயர்ந்தது
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இன்று சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 576 ரூபாயாக விற்பனையானது.
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில், சவரனுக்கு 750 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலையில், சவரனுக்கு 32 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கம் விலை நேற்று மாலையில் 32 ஆயிரத்து 408 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் 168 ரூபாய் அதிகரித்து சவரன் 32 ஆயிரத்து 576 ரூபாயாக விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 72 ஆக விற்பனை ஆகும் நிலையில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது குறைந்துள்ளதுடன், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருவதால் ஆபரண தங்கம் விலை உயர்ந்து வருகிறது.