தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், நடன நிகழ்ச்சிகளும் களை கட்டியது.

Update: 2020-02-22 02:48 GMT
தஞ்சை

தஞ்சை பெரிய கோவிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் மகாசிவராத்திரி விழாவினையொட்டி சக்கரை குள தீர்த்தத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து, சிறுமிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர்கோவிலில் மகாசிவராத்திரி விழா களை கட்டியது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்ததோடு, நாட்டியாஞ்சலியும் நடைபெற்றன.

கும்பகோணம்

தென்னக காளகஸ்தி என போற்றப்படும் கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில்  நவராத்திரியை ஒட்டி நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் மகா சிவராத்திரியையொட்டி, 23 ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மைலாப்பூர்,சென்னை

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்றன.

இதேபோல் சேலம், நெல்லை பாளையங்கோட்டை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்,பாபநாசம், நாகையில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறைப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய விடிய கொண்டாடங்களோடு, விரதம் இருந்து சிவனை தரிசனம் செய்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்