தஞ்சை ஆட்சியருக்கு ரோஜா கொடுத்த விவசாயிகள் - பேரவையில் அரசு தாக்கல் செய்த மசோதாவுக்கு நன்றி

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தஞ்சை ஆட்சியருக்கு விவசாயிகள் ரோஜா வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Update: 2020-02-21 10:10 GMT
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தஞ்சை ஆட்சியருக்கு விவசாயிகள் ரோஜா வழங்கி நன்றி தெரிவித்தனர். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது, அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. இந்நிலையில், நேற்று சட்டப் பேரவையில், அதற்கான சட்ட முன் வடிவை, முதலமைச்சர் தாக்கல் செய்தார். அரசின் இந்தச் செயலை பாராட்டும் விதமாக  தஞ்சை ஆட்சியருக்கு ரோஜா மலர் கொடுத்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்