சிபிசிஐடி காவலில் ஜெயக்குமார், ஓம்காந்தன் - ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரிக்க முடிவு
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக, இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகிய இரண்டு பேரை ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக, இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகிய இரண்டு பேரை ராமநாதபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இருவரையும் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து 2வது முறையாக ராமநாதபுரம் அழைத்து சென்று சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.