நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நிறைவு : 24 மணி நேரம் நீடித்த சோதனை நிறைவு
நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரம் நீடித்து வந்த வருமான வரித் துறை சோதனை நிறைவடைந்தது.
சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டில், புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இரவிலும் விடிய விடி நீடித்தது. படப்பிடிப்பில் இருந்த விஜயை அழைத்து வந்து அதிகாரிகளை விசாரித்தனர். பிகில் படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளம் குறித்தும், பெற்ற சம்பளத்தை முதலீடு செய்தது குறித்தும் விசாரிக்கப்பட்டது. 24 மணி நேரத்துக்கு மேல் நீடித்த சோதனை, வியாழக்கிழமை இரவு நிறைவடைந்தது. இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவலுக்கு இருந்த போலீசார், விஜய் வீட்டிலிருந்து திரும்பி சென்றனர். இந்த சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா, ரொக்கம் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.