நாளை குடமுழுக்கு யாகசாலை பூஜை - யானை மீது புனிதநீர் கலசம் ஊர்வலம்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி யானை மீது புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

Update: 2020-01-31 12:02 GMT
தஞ்சை பள்ளியக்கிரகாரம் வெண்ணாற்றில் இருந்து கலசத்தில் எடுக்கப்பட்ட புனிதநீர், தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் முன், கைலாய வாத்தியம், மங்கள வாத்தியங்கள் முழங்க பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து சென்றனர். தப்பாட்டம், ஒயிலாட்டம் கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளால் புனிதநீர் கலச ஊர்வலம் களைகட்டியது. 

Tags:    

மேலும் செய்திகள்