"மறைமுக தேர்தலில் 19 உறுப்பினர்களும் சுதந்திரமாக வாக்களித்தனர்" - கனிமொழி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி பதவியேற்று கொண்டார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி பதவியேற்று கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு , மறைமுக தேர்தல் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார். 19 உறுப்பினர்களும் சுதந்திரமாக வாக்களித்ததாக அவர் கூறினார். திமுக உறுப்பினர்கள்தான் 27 நாட்களாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.