தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா - கோபுரத்தின் மேலே கொண்டு செல்லப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கலசம்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்காக தயாரிக்கப்பட்ட 12 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட கலசம் கோபுரத்தின் மேலே கொண்டு செல்லப்பட்டது.

Update: 2020-01-30 10:24 GMT
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. மேலும் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பணிக்காக பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரம் உள்ள மூலவர் கோபுரத்தில் இருந்த கலசம் கடந்த 5-ஆம் தேதி கழற்றப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டது. அதேபோல் மற்ற சன்னதி கோபுரங்கள்,  கலசங்கள் அனைத்தும் திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டு தங்கமுலாம் பூசும் பணி கடந்த 20  நாட்களாக நடந்து வந்தது. தங்க முலாம் பூசப்பட்ட  இந்த கலசமானது மீண்டும் கோபுரத்தின் மீது பொருத்துவற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுரத்துடன் கலசத்தை பொருத்தும் பணியும் தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்