5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக மனு - விரைவில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கட்டாய உரிமை சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நடைமுறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை சட்டவிரோதம் என உத்தரவிட்டு, தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.