அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்ட ஒப்பந்ததாரர்கள் - முடித்த பணிகளுக்கு உரிய பணம் வழங்கவில்லை என புகார்

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-27 10:49 GMT
திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அனல்மின் நிலையத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிகளை முடித்து 9 மாதங்களாகியும் காசோலை வழங்கப்படாததை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் வினியோகிஸ்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பணிகளை முடித்து முறையான ரசீது உள்ளிட்ட ஆவணங்களையும் வழங்கிய நிலையில் 9 மாதங்களாக பணத்தை வழங்காமல் அனல்மின் நிலைய நிர்வாகம் அலட்சியம் செய்வதாக புகார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்